கூட்டமைப்பின் அடுத்த நகர்வு – மாவை வெளியிட்டுள்ள தகவல்

கூட்டமைப்பின் அடுத்த நகர்வு – மாவை வெளியிட்டுள்ள தகவல்

யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை இழந்திருந்தாலும் சபையில் தொடர்ந்து வரும் வரவு செலவுத் திட்டம் உட்பட அனைத்து விடயங்களையும் ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது தொடர்பில் ஆராய்ந்தே தீர்மானம் எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

யாழ். மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ். மாநகர சபையில் எங்கள் வேட்பாளர் வெற்றி பெற முடியாத நிலையில் மணிவண்ணணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனூடாக புதிய முதல்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் எமது கட்சியின் உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் ஆராய்ந்திருக்கிறோம்.

குறிப்பாக நாங்கள் எதிரணியில் இருக்கிறோம் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்ப்தோ அல்லது ஆதரிப்பதோ என்ற நிலைப்பாட்டை எடுப்பதில்லை.

குறிப்பாக வரவுள்ள வரவு செலவுத் திட்டத்தை ஆராய்ந்து அதனை ஆதரிப்பதா எதிர்ப்பதால என தீர்மானம் எடுப்போம்.

ஏனைய சந்தர்ப்பங்களில் அந்தந்த பிரேரணையின் நன்மை தீமையை ஆராய்ந்த அதன் பின்னர் அது தொடர்பில் திர்மானம் எடுக்கப்படும்.

ஆகையினால் இனிவரும் காலங்களில் சபையின் விடயங்களில் சபை உறுப்பினர்கள் கட்சித் தலைமையோடு கலந்துரையாடி தீர்மானங்களை எடுத்து அதற்கமைய செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *