ஒரு நாள் குஞ்சு போல

ஒரு நாள் குஞ்சு போல

பழைய பெட்டகத்தில்
என்னுடன் இருந்த,
சந்தோசம்
முழுதையும்
அடுக்கிவைத்து
இறுக்கி பூட்டி
திறப்பையும்
தூரமாய் எறிந்து விட்டு
புதிய சூட்கேசில்
கோடு போட்ட
வாழ்க்கை முறையின்
அட்டவணை
சீட்டையும்
திணிக்க இருக்கும்
இயந்திர வாழ்க்கை
நினைவையும்
கூடவே இழுத்துக்
கொண்டு வந்துள்ளேன்
முட்டையால்
வெளிவந்த
ஒரு நாள் குஞ்சு போல
ஒண்டுமே
விளங்குதில்லை
வாழ்க்கையின் தத்துவம்
கொஞ்சமும்
தெரியாதவர் முந்தி
வந்ததால் என்னவோ
இருத்தி வைத்து
வகுப்பும் எடுத்தார்
விமான கதவு
புனைச்சலுக்கு
எண்ணெய் விட்டதாய்
சொல்லுகிறார்
கோவத்தையும் கருத்தையும்
வெளிக்காட்ட
முடியா biggboss
நிகழ்ச்சியாகிவிட்டது
வெளிநாட்டு வாழ்க்கை ? ……

(யாழ் சுதா )


administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *