“மனித உரிமைகளை மீறியமையால் இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டும்” என்று முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயல்பாட்டாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று, அரசாங்கம் புதிதாக நியமித்துள்ள மனித உரிமைகள் ஆணையாளர் சுயாதீனமாக இல்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார் இது தொடர்பிலும் அரசு விசாரிக்கும் என்றும் கூறப்பட்டது.
மேலும், முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியாமல் இலங்கை தொடர்பில் 300 அறிக்கைகளை அனுப்பி வைத்துள்ளது என்று கூறப்படுகின்றது.
இந்த அறிக்கைகளில் நாட்டின் இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.