ஊவா தென்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கும் பொதுமன்னிப்பு வழங்க முடியும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தள்ளார்.
கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
துமிந்த சில்வாவின் விடுதலையை தடுக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுத்தமை வெளியாகியிருந்தன.
பெருந்தொகை ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட ஊவா தென்னே சுமன தேரரை விடுதலை செய்ய முடியும் என்றால், துமிந்த சில்வாவையும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்
முன்னாள் எம்.பி. துமிந்தா சில்வா மீது நியாயமற்ற முறையில் வழக்குத் தொடரப்பட்டதாகவும், இது தொடர்பாக நீதித்துறை செல்வாக்கு செலுத்தியது தெரியவந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.