இலங்கையில் பெற்றோரின் பிரச்சினைகள் காரணமாக கொல்லப்பட்ட குழந்தைகள் தொடர்பான விபரங்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், பெற்றோருக்கு இடையிலான வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் 21 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்றோர் 21 குழந்தைகளை வீசி விட்டுச் சென்றுள்ளனர். எனினும் கடந்த 2020 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோங்கள் மற்றும் சித்தரவதைகள் குறித்து குறைவான சம்பவங்களே பதிவாகியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டைவிட 2020 ஆம் ஆண்டில் சிறுவர்களை தொழில்களில் ஈடுபடுத்தும் எண்ணிக்கையானது 2 வீதமாக குறைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.