அமெரிக்காவில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து டிரம்பின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட கலகத்தை ஹொங்ஹொங்கில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களுடன் ஒப்பிட்டுள்ள சீனா எனினும் ஹொங்ஹொங்கில் எவரும் கொல்லப்படவில்லை என தெரிவித்துள்ளது.சீனாவின் வெளிவிவகா அமைச்சின் பேச்சாளர் ஹ_வா சனியிங் இதனை தெரிவித்துள்ளார்.
ஹொங்ஹொங்கில் 2019 இல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவில் இடம்பெற்றதை விட தீவிரமானவை என தெரிவித்துள்ள அவர் ஆனால் ஹொங்கொங்கில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் கூட உயிரிழக்கவில்லை என குறி;ப்பிட்டுள்ளார்.
அமெரிக்க மக்கள் அமைதி ஸ்திரதன்மை பாதுகாப்பு போன்றவற்றை கூடிய விரைவில் அனுபவிக்கவேணடும் என நாங்கள் விரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஹொங்ஹொங்கில் 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் வெளியிட்டுள்ள கருத்துக்களையும் சீனாவின் பேச்சாளர் கண்டித்துள்ளார்.
ஹொங்ஹொங்கி;ல் 2019 இல் இடம்பெற்றவை தொடர்பில் அமெரிக்காவில் உள்ள சிலர் பதிலளித்த விதமும் தெரிவித்த கருத்துக்களும் இன்று அங்கு நடக்கும் விடயங்கள் குறித்து அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவையாக காணப்படுகி;ன்றன என சீனாவின் வெளிவிவகார பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவில் இடம்பெற்ற வன்முறைகளின் காட்சிகளை சீன தொலைக்காட்சி தொடர்ச்சியாக ஒளிபரப்பியுள்ளது.