யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக இடைவிடாது போராட்டம்- எந்நேரத்திலும் குழப்பம் ஏற்படலாம்! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு

யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக இடைவிடாது போராட்டம்- எந்நேரத்திலும் குழப்பம் ஏற்படலாம்! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு

யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்களது போராட்டம் இடைவிடாது தொடர்கின்றது. இந்நிலையில், அனைத்து தரப்பினரையும் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதி எங்கும் திரண்டிருந்தனர்.

அதனால் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸாரும் இராணுவத்தினரும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்ட நிலையில் சிறப்பு அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிடம் இடித்து அழிக்கப்பட்ட விடயத்தை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் தடையையும் உடைத்து உள்ளே சென்ற மாணவர்களும் சட்டத்தரணி க.சுகாசும் உறுதி செய்தனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய எவருக்கும் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதியளிக்கவில்லை. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரும் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்தனர்.

அதனால் பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை நேற்று இரவு 9 மணி தொடக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போது பல்கலைக்கழக வாயில் முன் பெரும்பாலானோர் அமர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. எந்நேரத்திலும் குழப்பம் ஏற்படலாம் என்ற அச்ச நிலை காணப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் 2018ஆம் ஆண்டு நினைவு தூபி அமைக்கப்பட்டிருந்தது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *