கொரோனா வைரசின் ஆரம்பம் குறித்து ஆராய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழு வுகான் சென்றடைந்துள்ளது.
இன்று காலை வுகான் சென்றடைந்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவினர் இரண்டு வாரங்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்ட பின்னர் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
சீன அதிகாரிகள் வழங்கவுள்ள மாதிரிகள், ஆதாரங்களின் அடிப்படையிலேயே உலக சுகாதார நிறுவனத்தின் குழுவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
பல தடங்களுக்குப் பின்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொரோனா வைரசின் தோற்றுவாயை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பத்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நிறுவகத்தின் நிபுணர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து தகவல்களைப் பெறவுள்ளனர்.
வுகானில் கொரோனா வைரஸ் ஆரம்பமாகவில்லை என சீனா தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.