தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவேந்தும் நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற போதிலும் அந்த அமைப்பு மீதான தடையை அமெரிக்கா நீடித்துள்ளது.
இதன்படி அமெரிக்க வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் அமைப்பு உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை தனது வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் புதிய அறிக்கையை நேற்று வெளியிட்டது.
குறித்த பட்டியலில் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயர் தொடந்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலின் கீழ் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு கடந்த 10.08.1997ஆம் ஆண்டு முதல் பட்டியலிடப்படுகிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், லஸ்கர் ஐ ஜாங்வி(LJ) மற்றும் ஐஎஸ்ஐஎல் சினாய் குடாநாடு(ISIL- SP) ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களை உள்ளடக்கி திருத்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.