அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது!

அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது!

அமெரிக்காவின் புதிய  ஜனாதிபதியின் பதவியேற்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தலைநகர் வொஷிங்டனில் ஏராளமான ஆயுதங்களுடன் ஒருவர் சிக்கியதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) ஆதரவாளர்களால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து வொஷிங்டன் முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வரப்பட்டுள்ளது.

குறிப்பாக வெள்ளை மாளிகையைச் சுற்றி 15 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதமேந்திய பொலிஸார் பணியில் ஈடுபடத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வர்ஜீனியாவைச் சேர்ந்த வெஸ்லி ஆலன் பீலர் (Wesley Allen Beeler) என்பவர் போலிச் சான்று மூலம் வொஷிங்டனுக்குள் நுழைய முயன்றார்.

அவரைத் தடுத்து நிறுத்திய பொலிஸார்  சோதனை செய்ததில் அவரிடம் கைத்துப்பாக்கி, 500 தோட்டாக்கள், ஷொட்கன் துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன்  வொஷிங்டனில்  பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *