போதை பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக சரியான பொறிமுறையினூடாக விரைவில் தண்டனையை பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் நீதி அமைச்சர் அலிசப்ரிக்கும் இடையில் குறித்த கலந்துரையாடல் நீதி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.இந்த கலந்துரையாடலின் போது, போதை பொருள் வியாபாரிகள், அதனை வநியோகிப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக விரைவில் தண்டனை பெற்றுக்கொடுக்க தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன் வெளிநாடுகளில் இருக்கும் போதைப் பொருள் வியாபாரிகளை நாட்டுக்கு அழைத்துவரவும் அந்த வியாபார வலைத்தளத்தை இல்லாமலாக்கவும் தேவையான செயற்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.
அதே போன்று சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகளை குறுகிய காலத்துக்குள் விசாரணை செய்து, மேல் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரம் தாக்கல் செய் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பாக இருக்கும் சட்ட திட்டங்களில் குறைபாடுகள் இருக்குமாக இருந்தால், அதனை இனம் கண்டு, தேவையான சட்ட திருத்தங்களை விரைவில் மேற்கொள்ளவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.