மேய்ச்சல் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொக்கட்டிச்சோலையில் ஆர்ப்பாட்டம்

மேய்ச்சல் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொக்கட்டிச்சோலையில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் கால்நடைக்கு ஒதுக்கப்பட்ட  மேய்ச்சல்தரைகாணியை சிங்கள மக்கள் அத்துமீறி பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடை பண்ணையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இன்று புதன்கிழமை (20) பட்டிப்பளை பிரதேசத்தில் இருந்து ஆர்ப்பாட்டமாக பிரதேச செயலகம் வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை 135 கிராம சேவகர் பிரிவில் உள்ள பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான மணல்ஏற்றம், காத்தாடியார்சேனை ,பொன்னாங்கண்ணிசேனை, பனையடிவெட்டை, மலையடிவெட்டவிச்சுகுளம்.  ஆகிய வன பிரதேச கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரையை பண்ணையாளர்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் சில வருடங்களாக சிங்கள மக்களால் அத்துமீறிய பயிர் செய்கையில் ஈடுபட்டுவருவதுடன், 1500 ஏக்கருக்கு அதிகமான காடுகள் அழிக்கப்படுவதுடன் முட்கம்பிகள் பயன்படுத்தப்பட்டு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது

இதந்த மேச்சல் தரை அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் பட்டடிப்பளை பிரதேச சபைக்கு முன்னாள் ஒன்று கூடிய கால்நடை பண்ணையாளர்கள் அரசியல் வாதிகள் ஒன்றினைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து அங்கிருந்து பட்டிப்பளை பிரதேச செயலகம் வரை ஆர்ப்பாட்டமாக சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்இதனையடுத்து இதில் கலந்து பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன். மற்றும் பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர், போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஆகியோர்  கொண்ட பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்ததையடுத்து அங்கிருந்து ஆர்ப்பாட்டகாரர்கள் விலகிச் சென்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *