கொடிய பிரானா மீன் (PRANHA)

கொடிய பிரானா மீன் (PRANHA)

இன்று அநேக நாடுகளில் தடை செய்யப்பட்ட மீன் வகைகளில் இதுவே முதலிடத்தில் உள்ள ஒருவகை மீனாகும் . ஆனாலும் சில நாடுகளில் மீன் தொட்டிகளில் மாத்திரம் இவற்றை வழர்க்க அனுமதி உண்டு. இந்த வகை மீன் மிகக் கொடியது என்றும் மாமிச உண்ணி ( Canivorous animal ) என்றும், இவைகள் மத்தியில் விழும் எந்த உயிரினத்தையும் நொடிப்பொழுதில் திண்று முடித்துவிடும் என்றும் கூறுகின்றனர்.  பல பிரபல்யமான ஆங்கில சினிமாப்படங்களான “பிராணா பூள்” (Pranha Pool) “யூ ஒன்லி லிவ் ருவைஸ்” (You only live twice) பிறசிடன்ற் ரெடி றூஸ்வெல்ற்” (President Teddy Roosvelt) சினிமாப் படங்க்கள்   இந்த மீனின் கொடூர தன்மையை எடுத்துக் காட்டியுள்ளன.

ஒரு சிலர் இவை மாமிச உண்ணி மட்டுமல்ல தாவர உண்ணியும்கூட எனக் கூறுவதோடு எந்தப் பெரிய உயிரினமாக இருந்தாலும் கூட்டமாகச் சேர்ந்து கணப்பொழுதில் தின்று முடித்துவிடும் என்றும் கூறுகின்றனர்.

இவை மிருகங்களிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் விலகி நிற்கும் உயிரினமாக இருந்தபோதும் இரத்த வாடை ஏற்படுமிடத்து விரைவாகச் சென்று தாக்கும். மேலும் அத்திலாந்திக் (Atlantic) சமுத்திரத்தில் அமைந்துள்ள 6400 கிலோ மீட்டர் நீளமானதும், பேறு (Peru), கொலம்பியா (Colombia), பிறேசில் (Brazil)  போன்ற நாடுகளை ஊடறுத்துச் செல்வதுமான அமேசன் (Amazon) நதியில் இவை அதிகமாகக் காணப்படுகின்றது.  கோடை காலங்களில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்பொழுது இவை மனிதர்களையும் அனேக தடைவைகள் தாக்கியுள்ளது.

பண்டைய காலங்களில் கோட்டைகளைச் சுற்றி ஆழிகளைகத் தோண்டி முதளைகளையும் இப்படியான கொடிய மீன்களையும் வளர்த்து தங்கள் கோட்டைகளை எதிரிகளிடமிருந்து காப்பாற்றியுள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *