முன்னைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப் (Donald Trump) அவர்களின் வழிமுறைகளை, வட கொரியா நாடு சம்பத்தப்பட்ட காரியங்களில், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) அவர்கள் பின்பற்றவேண்டுமென தென் கொரியத் தலைவர் கடும் தொனியில் எச்சரித்துள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட வாக்குகளால் பதவியில் அமர்ந்தவர் என்ற குற்றச்சாட்டை, அமெரிக்க சரித்திரத்தில், முதன்முதலாக சுமக்கின்ற ஜோ பைடன், “ட்றம்ப் தொட்டதெல்லாம் கெட்டது” என்ற நினைப்போடு அவர் எடுத்த நடவடிக்கைகள், தீர்மானங்கள் எல்லாவற்றையும் இல்லாமல் பண்ணவேண்டும் அல்லது மாற்றியமைக்கவேண்டும் என பதவியிலமர்ந்த முதல் நாளிலிருந்தே ஆரம்பித்துவிட்டார். அடங்கிக் கிடந்த சைனா இப்போது தாய்வான், இந்தியா போன்ற நாடுகளோடு தனது வழமையான சண்டித்தனத்தை ஆரம்பித்துள்ளது.
ட்றம்ப் அவர்களின் ஆட்சிக்காலத்தில் தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த சுங்க் உய் யொங்க் (Chung Eui-yong ) தற்போது தென்கொரியத் தலைவரால் வெளி நாட்டு அலுவல்கள் அமைச்சராக பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். இவர் ட்றம்பின் காலத்தில் வடகொரியத் தலைவர் கிம் யொங்க் உன் (Kim Jong-Un) டொனால்ட் ட்றம்ப் (Donald Trump) அவர்களோடு பேச்சுவார்த்தை நடாத்துவதற்கும் பல உடன்படிக்கைகள் ஏற்படுவதற்கும் காரணகர்த்தாவாக இருந்தவர்.
தென் கொரியத் தலைவர் மூண் (Moon) அவர்கள் ” நாம் ட்றம்ப் அவர்கள் ஆரம்பித்த முயற்சியை தொடரவேண்டும், ஜோ பைடன் அவர்களும் வடகொரியத் தலைவர் உன் (Kim Jong-Un) அவர்களோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அணு ஆயுதக்குறைப்புத் திட்டத்தை நிறைவேற்றவேண்டும் எனக் கேட்டதோடு அப்படி ஒத்துளைக்காவிட்டால் தமது அரசியல் உறவில் விரிசல் ஏற்படும் எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.