கொவிட் -19 தொற்றுநோயின் தோற்றம் குறித்து ஆராய சீனாவின் வுஹான் மாகாணத்துக்கு விஜயம் செய்த உலக சுகாதார அமைப்பின் (WHO) குழு தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளது.
அதன்படி, கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆராய ஆரம்ப பணிகளை அந்தக்குழு தொடங்கியுள்ளது.
அங்கு, இந்த குழு கொரோனா தொற்றுடன் தொடர்புடைய ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் மீனவர்களுடன் நேர்காணல்களை நடத்தவுள்ளது.
அவர்களின் ஆராய்ச்சி சீன அதிகாரிகள் வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.
உலக சுகாதார அமைப்புக்கும் பீஜிங்கிற்கும் இடையே பல மாதங்களுக்குப் பிறகு, வைரஸின் தோற்றம் குறித்து ஆராய வாய்ப்பு கிடைத்தது.
14 ஆம் திகதி வுஹானுக்கு வந்த 13 பேர் கொண்ட குழு, ஆராய்ச்சியைத் தொடங்குவதற்கு முன் தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.