அமைச்சர் சரத் வீரசேகர கூறியது போல – வடக்கு , கிழக்கு மாணவர்கள் அல்லது இளைஞர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நேற்றையதினம் தெரிவித்திருந்தார்.
இக்கூற்று தமிழ் மக்களிடையே பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இக்கருத்து தொடர்பில், விக்னேஸ்வரன் மன்னிப்புக் கேட்கவேண்டும் ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.