13ஆவது சட்டத்திருத்தத்தின்படி, அதிகாரப் பகிர்வு  உறுதி -எஸ்.ஜெய்சங்கர்

13ஆவது சட்டத்திருத்தத்தின்படி, அதிகாரப் பகிர்வு உறுதி -எஸ்.ஜெய்சங்கர்

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுமென திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், தி.மு.க பாராளுமன்றக் குழுத் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினருமான டி. ஆர். பாலு, இலங்கையில் தமிழர்கள் வாழும் மாகாணங்களை கலைத்துவிட, இலங்கை அரசு முடிவெடுத்துள்ளதை கண்டித்தும், தமிழக மக்களின் கண்டனத்தையும் தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்துள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கடந்த டிசம்பர் 31ம் திகதி அவர் இந்த கடிதத்தை எழுதியிருந்தார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன், இலங்கை அரசு செய்து கொண்ட இருதரப்பு ஒப்பந்தத்தின்படி ஏற்படுத்தப்பட்ட, 13ஆவது சட்டத்திருத்தத்திற்கு எதிராக, இலங்கை அரசு, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களை கலைக்க முடிவு செய்திருப்பது, தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அலட்சியத்தை காட்டும், துரதிர்ஷ்டமான முடிவாகும் என்பதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

டி. ஆர். பாலுவின் கடிதத்திற்கு விரிவான பதிலை எழுதியுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது :-

ஒன்றுபட்ட இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்திற்கான அம்மக்களின் எதிர்பார்ப்புகளை பாதுகாக்க, அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டுமென, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இலங்கை அரசை தொடர்ந்து, இந்திய அரசு வலியுறுத்தி வருகின்றது.

இலங்கை அரசால் உறுதியளிக்கப்பட்ட,13ஆவது சட்டத்திருத்தத்தின்படி, அதிகாரப் பரவலை உறுதி செய்வதும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதும், இலங்கை அரசின் நலன்களை பாதுகாக்க உதவும் என எனது சமீபத்திய இலங்கை பயணத்தின் போது இலங்கை அரசிடம் கேட்டுக் கொண்டேன் என்றும் கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *