கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் உரிமையை சமரசம் செய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்ப்பதற்கு ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்கும் பத்து அரசியல் கட்சிகள் ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுளளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய உரிமையை சமரசம் செய்து அபிவிருத்தி செய்வதற்கும், முதலீடு செய்வதற்கும் அல்லது மாற்றுவதற்கும் எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்ப்பதற்கு பத்து கட்சிகள் ஒருமனதாக ஒப்புக் கொண்டதாக அமைச்சர் வீரவன்ச கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கிழக்கு முனைய உரிமை இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் இலங்கை சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, யுதுகம டயலொக் போரம், லங்கா சமசமாஜ கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பத்து அரசியல் கட்சிகளே இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன.
அத்துடன் மக்கள் மக்கள் சக்தியின் வண. அதுரலிய ரத்தன தேரரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.