கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை இந்தியாவுக்கு வழங்குவதை எதிர்த்து துறைமுக ஊழியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது
சட்டப்படி வேலை என்ற தொழிற்சங்க நடவடிக்கையில் நேற்று முன்தினம் முதல் கொழும்பு துறைமுக ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டம் எதிர்வரும் தினங்களில் பாரிய வேலைநிறுத்த போராட்டமாக உருவெடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.