மியன்மாரில் வெடித்த இராணுவப் புரட்சியை ஸ்ரீலங்காவிற்கு சிவப்பு எச்சரிக்கையாக பார்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மியன்மாரில் எதிர்வரும் ஓராண்டுக்கு அவசர நிலை அமுல்படுத்தப்படுவதாக அந்த நாட்டின் இராணுவம் அறிவித்துள்ளது.
மியன்மாரில் கடந்த சில வாரங்களாகவே 2020 நவம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கும், அந்த நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்தது.
இந்த சூழலில், மியன்மார் அரசாங்க ஆலோசர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி உள்ளிட்டோரை இராணுவம் சிறைபிடித்தது.
இதனால், அந்த நாட்டில் மீண்டும் இராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாவது,
மியன்மாரில் இடம்பெற்ற விடயங்கள் ஸ்ரீலங்காவிற்கு ஒரு சிவப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
இராணுவத்தை சிவில் நிர்வாகத்தின் தாழ்வாரத்திற்குள் கொண்டுவந்தால், இராணுவம் மக்கள் ஆணையின் செல்லுபடியை தீர்மானிப்பதில் நீதித்துறையினதும் தேர்தல் ஆணைக்குழுவினதும் பங்களிப்பை தவிர்க்க விரும்புவார்கள் இது தவிர்க்க முடியாதவிடயமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.