மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட வீடியோ எமது நாட்டில் எடுக்கப்பட்டதல்ல -கெஹெலிய

மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட வீடியோ எமது நாட்டில் எடுக்கப்பட்டதல்ல -கெஹெலிய

இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்றவை எனத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் உள்ள வீடியோ எமது நாட்டில் எடுக்கப்பட்டதல்ல என கோட்டாபய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளதாவது,

இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் வெவ்வேறு உலக நாடுகளில் படமாக்கப்பட்டவை என்பதை இலங்கை ஏற்கனவே நிரூபித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் குறித்து சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்கள் சிலர் எழுப்பும் கேள்விகள் அரசியல் நோக்கங்களை கொண்டவை.

சில தரப்பினர் முன்வைக்கும் கேள்விகள் உள்நோக்கங்களை கொண்டவை என்பதால் இராஜதந்திர அளவில் பதிலளிக்கவேண்டிய கேள்விகளை இலங்கை தெரிவு செய்யவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *