பிரபல பாதாள உலக கும்பலலின் முன்னாள் பொறுப்பாளர் அங்கொட லொக்காவின் மரணத்தை இந்தியா உறுதி செய்துள்ளதுடன், அங்கொட லொக்காவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் டீ.என்.ஏ மாதிரியையும் பெற்றுத்தருமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2017 ம் ஆண்டில் களுத்துறை எத்தனமடல்ல பகுதியில் சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக அங்கொட லொக்கா எனும் மத்தும லசந்த சந்தன பெரேரா என்பவர் குற்றம் சாட்டப்பட்டார். எனினும் இலங்கையிலிருந்து தப்பி ஓடியதுடன் தமிழ்நாடு கோயம்புத்தூர் பகுதியில் தங்கியிருந்த போது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
“இம் மரணத்தை இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவு உறுதி செய்து இலங்கையின் , சர்வதேச பொலிஸ் பிரிவுக்கு அறிவித்துள்ளது. இதனை உயிரியல் ரீதியில் உறுதி செய்வதற்காக உயிரிழந்த அங்கொட லொக்காவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் டீ.என்.ஏ. மாதிரியை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறும் அறிவித்துள்ளது.
அங்கொட லொக்கா என்பவர் இந்தியாவுக்கு தப்பிச்சென்றதையடுத்து இவர், பிரதீப் சிங் எனும் போலியான பெயரில் இந்திய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளதாகவும் இந்திய விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.”
இதுகுறித்து விசாரணைகளை முன்னெடுத்த இந்திய தேசிய விசாரணைப் பிரிவு இதனை உறுதிசெய்து நாட்டின் சர்வதேச பொலிஸ் கிளைக்கு அறிவித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.