புலிகள் அமைப்பின் கைப்பாவையே  மனித உரிமை ஆணையாளர் மிஷேல் – உதய கம்மன்பில

புலிகள் அமைப்பின் கைப்பாவையே மனித உரிமை ஆணையாளர் மிஷேல் – உதய கம்மன்பில

பிரிவினைவாத புலிகள் அமைப்பின் கைப்பாவையே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெச்சலெட் என அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

மனித உரிமை ஆணைக்குழுவில் கொண்டு வரப்படும் யோசனையை முற்றாக நிராகரிக்க அரசாங்கம் தீர்மானித்ததை நாங்கள் தலைவணங்கி வரவேற்கின்றோம்.

குறிப்பாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் கடற்படையில் கடமையாற்றிய சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். அரசியலுக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு பின்னரே அவர் அமைச்சர் பதவிக்கு வந்துள்ளார்.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு உலகம் முழுவதும் கிடைக்கும் சிவில் உரிமையை இரத்துச் செய்ய மனித உரிமை ஆணையாளர் யோசனை முன்வைக்கின்றாரா? என்ற கேள்வி நாம் எழுப்ப வேண்டியுள்ளது.

சரத் வீரசேகர கடந்த பொதுத் தேர்தலில் 3 இலட்சத்து 28 ஆயிரம் வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது மிகப் பெரிய மக்கள் ஆணை.

இதேபோல சவேந்திர சில்வா போர்க் குற்றங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் தமிழ் பிரிவினைவாதிகளால் கடந்த 12 ஆண்டுகளாக போர் குற்றத்திற்கான சாட்சியங்களை முன்வைக்க முடியவில்லை.

இப்படியான பின்னணியிலேயே மனித உரிமை ஆணையாளர் போர்க் குற்றவாளி என சவேந்திர சில்வாவை கூறுகிறார்.

கடந்த அரசாங்கம் அவரை இராணுவத் தளபதியாக நியமிக்கும் போது அது நல்லது. எமது காலத்தில் அவர் இராணுவத் தளபதியாக செயற்படுவது கெடுதியானது. இது மனித உரிமை ஆணையாளரின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது என்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *