கொரோனா வைரசுக்கான புதிய வகை தடுப்பூசி ஒன்று தற்போது பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருந்த AstraZeneca எனும் தடுப்பூசிகளே தற்போது போடப்பட்டு வருகின்றது. நீண்டநாட்களாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை முதல் இந்த தடுப்பூசிகள் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த AstraZeneca தடுப்பூசிகளை 65 வயதுக்குட்பட்ட மருத்துவர்களுக்கும் போடப்பட உள்ளதாகவும், அவர்களுக்கான தடுப்பூசிகள் இன்று சனிக்கிழமை முதன் முதலாக போடப்படும் எனவும் அறிய முடிகிறது. இதுவரை பிரான்சில் மொத்தமாக 1.86 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அவர்களில் 247.260 பேருக்கு இரண்டாவது தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக 304,800 தடுப்பூசிகள் வரும் வாரத்தில் பிரான்சை வந்தடைய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.