பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தை நடாத்திய நபர்களிற்கு எதிராக வழக்கு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தை நடாத்திய நபர்களிற்கு எதிராக வழக்கு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கெடுத்தவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நடவடிக்கையினை முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் புதிய B அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவுப் பொலிஸாரால் ஏற்கனவே தடையுத்தரவு பெறப்பட்டிருந்த AR வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய B அறிக்கையிலான வழக்குகள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தை நடாத்திய நபர்களிற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த B அறிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டோரின் பெயர்களும் மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற எல்லைக்குள் பேரணியில் பங்கு பற்றமுடியாது, பேரணியை முன்னெடுக்க முடியாது என தடை கோரி தடையுத்தரவை பொலிஸார் பெற்றிருந்த நிலையில் கடந்த 5ஆம் திகதி பேரணி முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் நுழைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *