கருணாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் பேசிய கருணா, யுத்தத்தில் ஒரே இரவில் பெருமளவு இராணுவத்தை கொன்றதாக தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த பேச்சுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவரின் பேச்சு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும் குறித்த அடிப்படை உரிமை மனு இன்றையதினம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதாக சிங்கள இணையம் ஒன்று தெரிவித்துள்ளது.