இந்தியாவின் உத்தரகாண்டில் மண் சரிவால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 200பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்ற அதேவேளை நிலத்தடி சுரங்கப்பாதையொன்றிற்குள் இருந்து 12 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
நாங்கள் நம்பி;க்கை இழந்த நிலையிலிருந்தோம் அவ்வேளை எங்களில் ஒருவரின் தொலைபேசிக்கு உயிர் இருப்பது தெரியவந்தது அதனை பயன்படுத்தி நாங்கள் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டோம் என உயிருடன் மீட்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுரங்கப்பாதைக்குள்ளிலிருந்து வெளியே வருமாறு வெளியில் இருப்பவர்கள் கூக்குரலிடுவதை கேட்டோம்,நாங்கள் வெளியே வருவதற்கு முயன்றவேளை தீடிரென எங்கிருந்தோ வந்த பெருமளவு நீரும் வேறு பொருட்களும் நாங்கள் வெளியேற முடியாத நிலையை ஏற்படுத்தின என மீட்கப்பட்ட தொழிலாளர்களில ஒருவர் தெரிவித்துள்ளார்.தண்ணீர் உள்ளே நுழைந்தவேளை நாங்கள் 300 அடி ஆழத்திலிருந்தோம்,நாங்கள் சிக்குண்டோம் என மீட்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளநீர் எங்களை மேலும் உள்ளே இழுத்துசென்றவேளை மூலையொன்றிற்குள் சென்று பதுங்கியிருப்பதை தொடர்ந்து எங்களால் வேறு எதுவும் செய்யமுடியவில்லை என மீட்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் நம்பிக்கை இழந்த நிலையிலிருந்தோம்,ஆனால் பின்னர் சுவாசிப்பதற்கு சிறிது காற்றும் சிறிய வெளிச்சமும் கிடைத்தது,திடீர் என எங்களில் ஒருவரின் தொலைபேசிக்கு உயிர் வந்தது அதனை பயன்படுத்தி எங்கள் மேலதிகாரிகளை தொடர்புகொண்டோம் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.