உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது குறித்து நேற்று மாலைவரை எந்த தகவலும் இல்லை – சுகாதார அதிகாரிகள்

உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது குறித்து நேற்று மாலைவரை எந்த தகவலும் இல்லை – சுகாதார அதிகாரிகள்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்போவதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறித்து சுகாதார அமைச்சு கடும் மௌனத்தை கடைப்பிடிக்கின்றது என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.பிரதமர் மகிந்த ராஜபக்ச கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் ஆனால் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை கட்டாயமாக்கும் தற்போது காணப்படும் வர்த்தமானி அறிவித்தலி;ல் மாற்றங்கள் வருமா என்பது குறித்து எதுவும் தெரியாத நிலையில் சுகாதார அதிகாரிகளும் அரசாங்க அதிகாரிகளும் காணப்பட்டனர் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.
உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் முடிவை மாற்றுவது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து தங்களுக்கு நேற்றுமாலைவரை அறிவுறுத்தல் எதுவும் கிடைக்கவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற அறிவிப்பின் ஊடாகவே இது குறித்து அறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது குறித்த கலந்துரையாடல்கள் எவையும் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள சிரேஸ்ட அரச அதிகாரியொருவர் வைரஸ் நீரினால் பரவாது என அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்ததை தொடர்ந்தே மீண்டும் இந்த விடயத்தை நோக்கி கவனம் திரும்பியது என குறி;ப்பிட்டுள்ளார்..

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *