டிரம்பிற்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு விசாரணையில் அதிர்ச்சியூட்டும் புதியவீடியோ

டிரம்பிற்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு விசாரணையில் அதிர்ச்சியூட்டும் புதியவீடியோ

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட்டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறைகளில் ஈடுபட்டதை காண்பிக்கும் புதிய வீடியோவை அமெரிக்க ஜனநாயக கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.டிரம்பிற்கு எதிரான அரசியல் குற்றவியல் விசாரணையின் போது இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோக்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபடுவதை காண்பித்துள்ளன.பொலிஸார் உதவி கோருவதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நாடாளுமன்றத்திற்குள் காணப்பட்ட அதிகாரிகளை பாதுகாப்பான இடங்களிற்கு கொண்டுசெல்வதையும் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மிக அருகில் காணப்படுவதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.இ;ந்த வீடியோக்கள் முதல் தடவையாக வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் உடல்கவசங்களுடன் காணப்படுகின்றனர்.
அவர்கள் ஆக்ரோசத்துடன் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைகின்றனர் அதிகாரிகளை தேடிதிரிகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *