இங்கிலாந்தில் பரவி வரும் திரிபடைந்த வைரஸ் நாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேகமாகப் பரவும் இந்த வைரஸை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேசிய கொரோனா கட்டுப்பாட்டு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர்
மேலும் கூறுகையில், திரிபடைந்த வைரஸால் அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்தச் சூழ்நிலையில், நாடு முடக்கப்படலாம் என்று ஊகங்களே பரவி வருகின்றன. ஆனால், அது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
எனினும், இன்று திங்கட்கிழமை தேசிய கொரோனா கட்டுப்பாட்டு செயலணி கூடி ஆராய்ந்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.பொலிஸ் ஊடகப பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண,பொதுச் சுகாதார சேவைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்தஹேரத் ஆகியோரும் இதே கருத்தையே
வெளியிட்டனர்.