இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டத்தில் 40,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் என்ற ஐநாவின் ஆதாரமற்ற தொடர்;ச்சியான குற்றச்சாட்டுகள் 12வருடங்களான பின்னரும் தொடர்கின்றன என பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத விவகாரங்களுக்கான ஆய்வாளர் கலாநிதி ரொகான் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.ஆதாரமற்ற 40,000பேர் கொல்லப்பட்டனர் என்ற புள்ளிவிபரங்களும் யுத்தகுற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்குரியவை அநாமதேயமானை மற்றும் அடையாளம் தெரியாத ஆதாரங்களை கொண்டவை எனவும் தெரிவித்துள்ள ரொகான் குணரட்ண இலங்கை ஆயுதப்படைகள் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டுவதற்கான அடிப்படையை வழங்குவதற்காக நம்பகதன்மை மி;க்க ஆதாரங்கள் என தெரிவிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.இலங்கை படையினர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இழுக்கவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குற்றவாளி என நிரூபிப்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லாமல் பொறுப்புக்கூறல் சாத்தியமில்லை என்பதால் முதலில் தரவுகளை விஞ்ஞானரீதியிலும் வெளிப்படையாகவும் சேகரிக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் உயிரிழந்தவர்கள் காயமடைந்தவர்கள் காணாமல்போனவர்கள் குறித்த தரவுகள் அவசியம் என தெரிவித்துள்ளார்.ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையே இதனை முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஏழாயிரம் முதல் 40000பேர் வரைஉயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர் உண்மையான புள்ளிவிபரங்களிற்கான உடனடி தேவை காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.