முளு உலகத்தையும் பொருளாதார ஆக்கிரமிப்பினால் மட்டுமல்ல சைனீஸ் வைறஸ் கோவிட்-19 ஆலும்ஆட்டம்காண வைத்த சீன அதிபர்சிய் ஜின்பிங்கினின் (Xi Jinping) அண்மைக் கால நடவடிக்கைகளால் ஆட்டங்காண ஆரம்பித்துள்ளது. அவுஸ்றேலியா (Australia) நாட்டோடு முறுகல் நிலையிலுள்ள சீனாஅந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பார்லி (Barley) மாட்டிறைச்சி (Beef) ஆட்டிறைச்சி (Lamb) சிங்க இறால் (Lobster) மரம் (Timber) மதுபானம் (Wine) போன்ற பொருட்களுக்கு வரிகளைக் கூட்டி பொருளாதார நெருக்கடியைக் கொடுத்ததுமட்டுமல்லாது நிலக்கரி(Coal) இறக்குமதிக்கும் தடை விதித்தது.
சீன தேசத்தின் மிகப் பெரும் வருமானத்தை கொடுக்கும் இரும்பு உற்பத்தி, கட்டிடத்துறை; மின் உற்பத்தி போன்றவை, நிலக்கரி பற்றாக் குறையினால் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இந்தப் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக பழைய இரும்புப் பொருட்களை இறக்குமதி செய்து உருக்கி கட்டிடங்களுக்குத் தேவையான இரும்பை உருவாக்கவேண்டியுள்ளது.
மேலும் மின் உற்பத்திக்கும் நிலக்கரியிலேயே தங்கியிருப்பதால் கடும் குழிர் காலத்தில் சீனர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அமெரிக்காவின் ரெக்சஸ்(Texas) மானிலத்தில் நேற்றைய தினம் கடும் பனிப்புயல் காரணமாக மின்சாரம் தடைப்பட்டு கடும் குழிரில் சிக்கித் தவித்தனர், சிலர் தங்கள் வாகனத்துக்குள் இருந்து தங்களை சூடேற்றி காப்பற்றியுள்ளனர். மின்சாரக் குறைபாடு சீனாவுக்கு மிகுந்த பொருளாதாரத்தை மட்டுமல்ல மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும்