விராட் கோலியை 3-வது டெஸ்டில் விளையாட அனுமதிக்கக் கூடாது: டேவிட் லாயிட்

விராட் கோலியை 3-வது டெஸ்டில் விளையாட அனுமதிக்கக் கூடாது: டேவிட் லாயிட்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. 3-வது நாள் ஆட்டத்தில் கடைசி ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். ஜோ ரூட் பந்தை எதிர்கொண்டார்.
பந்து ஜோ ரூட் கால் பேடில் பட்டு சென்றது. இந்திய வீரர்கள் எல்.பி.டபிள்யூ அப்பீல் கேட்டனர். நடுவர் விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார். ஆனால் ரீ-பிளே-யில் அம்பயர்ஸ் ஹால் என வந்தது. இதனால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி நடுவர் நிதின் மேனனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் அவுட் கொடுத்தால் அவுட், அவுட் இல்லை என்றால் அவுட் இல்லை என்ற கணக்கில் கேப்டன் செல்ல வேண்டும். 

விராட் கோலியின் செயலை விமர்சனம் செய்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் லாயிட், விராட் கோலியை 3-வது டெஸ்டில் விளையாட அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து டேவிட் லாயிட் கூறுகையில் ‘‘விராட் கோலிக்கு எதிராக எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான வார்த்தைகள் இல்லைய? இதனால் நான் விரக்தியடைகிறேன். கிரிக்கெட் மிகவும் பழமையானது. ஒரு அணியின் கேப்டன் நடுவரை விமர்சனம், கேலி, துன்புறுத்த, மிரட்ட அனுமதிக்கப்படுகிறார். தொடர்ந்து அவர் 2-வது டெஸ்டில் விளையாட அனுமதிக்கப்படுகிறார். இதுமட்டும் வேறொரு போட்டியாக இருந்தால், விராட் கோலி மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பார். கோலியை அகமதாபாத் 3-வது டெஸ்டில் விளையாட அனுமதிக்கக் கூடாது’’ என்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *