தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால் எம்மோடு இணங்கிக்கொண்ட சில விடயங்களை அமுல்ப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் 1987 ஆம் ஆண்டிற்கு பின்னர் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான பல இணக்கப்பாடுகள் காணப்படுகின்றன.
அவற்றை ஒன்றிணைத்து அமுல்ப்படுத்தினால் நாங்களும் அதனுடன் இணைந்து செயற்படத் தயாராகவிருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா தொடர்பாக இறுக்கமான தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.