உண்மையான பிரச்சினைகளை மறைக்கத் தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாராம் -ஜனாதிபதி

உண்மையான பிரச்சினைகளை மறைக்கத் தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாராம் -ஜனாதிபதி

மக்களுக்குச் சார்பாகக் கொள்கை ரீதியான தீர்மானங் களைச் சிலர் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள். இதன் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்கத் தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதி களுக்கு இடையிலான இழுபறியால் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். திட்டங்களைச் செயல்படுத்துவதில் வன விலங்கு, வனப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வீதிகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிறுவனங்களின் பொறுப் பான அதிகாரிகள் ஒரு கூட்டு முடிவுக்கு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன் காணிப் பயன்பாடு குறித்து முறையான திட்ட மிடல் இல்லாதது மக்களின் தவறு அல்ல. காணிப் பிரச் சினைகள் உட்படப் பல கிராமப்புற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்கும்போது அதிகாரிகள் களத்திற் குச் சென்று உண்மையான நிலைமையைப் பார்த்து தீர் மானங்களை எடுப்பது மிகவும் முக்கியமானது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மக்களுக்குச் சார்பாகக் கொள்கை ரீதியான தீர்மானங் களைச் சிலர் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள்.

இதன் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்கத் தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.நேற்றைய தினம் புத்தளம் மாவட்டத்தில் கருவலகஸ் வெவ பிரதேச செயலக பிரிவில் உள்ள பலீகம கிராம சே வகர் பிரிவில் உள்ள நெலும்வெவ சனசமூக நிலைய வளா கத்தில் இடம்பெற்ற 11 ஆவது ´கிராமத்துடன் உரையாடல்´ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *