கடற்றொழிலாளியின் சடலத்தை நாட்டிற்கு எடுத்து வர முடிவு -அமைச்சர் டக்ளஸ்

கடற்றொழிலாளியின் சடலத்தை நாட்டிற்கு எடுத்து வர முடிவு -அமைச்சர் டக்ளஸ்

மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்தை நாட்டிற்கு எடுத்து வந்து உறவினர்களிடம் கையளிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், குறித்த சடலத்தை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான 972,847 ரூபாய்கள் கடற்றொழில் அமைச்சினால் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சிற்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொண்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் உயிரிழந்த கடற்றொழிலாளியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்களின் படகு, காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த படகு மாலைதீவு கடலோரப் பாதுகாப்பு படையினரிடம் சிக்கியது.

இதன்போது, உயிரிழந்த நிலையில் கடற்றொழிலாளர் ஒருவரின் சடலத்தை மாலைதீவு அதிகாரிகள் மீட்டிருந்தனர்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்கான செலவையும் கடற்றொழில் அமைச்சின் ஊடாக செலுத்துவதற்கு அறிவுறுத்தியமைக்கு அமைய குறித்த நிதி வெளிநாட்டு அலவல்கள் அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *