வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களை ஒன்றிணைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்கிய புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த கூட்டணியின் தலைவர் பதவி பெரும்பாலும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த புதிய அரசியல் கூட்டணிக்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
மேற்படி புதிய அரசியல் கூட்டணியின் சின்னமான மலர் ஒன்றை பயன்படுத்துவது எனவும் அவர்கள் தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. பெரும்பாலும் புதிய கூட்டணியின் சின்னமாக தாமரை மலர் இருக்கலாம் எனவும் தெரியவருகிறது.