இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று முன்தினம் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் அங்கு மவுண்டோங் மாவட்டத்தில் புரங்கா கிராமத்தில் செயல்பட்டு வந்த தங்கச்சுரங்கம் கடும் சேதம் அடைந்தது. இதனால் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 5 பேர் இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தனர். 70 பேரை காணவில்லை.
இந்த தகவலை சுலவேசி மாகாண பேரிடர் மேலாண்மை முகமை தலைவர் டட்டு பமுசு டோம்போலொட்டு, செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், “தங்கச்சுரங்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 70 பேரை காணவில்லை. அவர்களில் பலர் இடிபாடுகளில் சிக்கி நிலத்தடியில் புதைந்து போய் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்கள் குறித்து அவர்களது குடும்பத்தில் இருந்து தகவல்கள் பெற்றுள்ளோம்” என கூறினார்.
காணாமல் போனவர்களை தேடும் பணியும், மீட்பு பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளன.