வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட சிறப்புத் தேடலின் போது கைத்தொலைபேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏகநாயக்கவின் உத்தரவில் வெலிக்கடை சிறைச்சாலையின் தேவாலயப் பிரிவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சோதனையின் போது 11 கைத்தொலைபேசிகள், 04 சிம் கார்டுகள், 08 பேட்டரிகள் மற்றும் 06 தொலைபேசி சார்ஜர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை ஏனைய சிறைச்சாலைகளிலும் இது போன்று தேடுதல் முன்னெடுக்கப்படும் என்றும் சிறைச்சாலை ஆணையாளர் குறிப்பிட்டார்.