இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பால் தாம் ஆச்சரியம் அடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தனது பெயரை வெளியிட விரும்பாத இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட தூதுவர் இலங்கை அமைச்சரவையின் அறிக்கை தொடர்பில் ஆச்சரியப்படுவதாகக் கூறினார்.
“இலங்கையில் முதலீடுகளுக்கு இலங்கை அரசாங்கமே அனுமதி அளிக்கவேண்டும் தவிர உயர் ஸ்தானிகராலயம் அல்ல” என்று அவர் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை நிர்மாணித்தல், அபிவிருத்தி செய்தல் மற்றும் மாற்றுவதற்கான திட்டத்தை இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்தியாவின் அதானி குழுமத்துடன் தொடர அனுமதி அளித்ததாக இலங்கை நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.