டில்ட் ஷிப்ட் வசதி, 108 எம்பி கேமராவுடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

டில்ட் ஷிப்ட் வசதி, 108 எம்பி கேமராவுடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

2021 ரியல்மி கேமரா இன்னோவேஷன் நிகழ்வில் ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி புதிய ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் 108 எம்பி HM221/1.52 பிரைமரி கேமரா கேமரா லென்ஸ் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த சென்சார் 9 இன் 1 பிக்சல் பின்னிங், ISOCELL பிளஸ், ஸ்மார்ட் ISO என பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

புது ஸ்மார்ட்போனில் பிரைமரி கேமரா மட்டுமின்றி மூன்று இதர சென்சார்கள் வழங்கப்படுகிறது. ரியல்மி 8 ப்ரோ கேமரா, 3எக்ஸ் மோட் கொண்ட சூப்பர் ஜூம் வசதி கொண்டுள்ளது. இதன் விசேஷ அம்சம் புகைப்படங்களை 12 எம்பி தரத்தில் மிக தெளிவாக கொடுக்கும் என ரியல்மி தெரிவித்து இருக்கிறது. 12 எம்பி தரத்தில் எடுக்கப்படும் போது புகைப்படம் வழக்கத்தை விட அதிக சிறப்பானதாக இருக்கும் என்றும் ரியல்மி தெரிவித்து உள்ளது.
மேலும் ஸ்டேரி டைம்-லேப்ஸ் வீடியோ (Stary time-lapse) மற்றும் டில்ட்-ஷிப்ட் டைம்-லேப்ஸ் வீடியோ (tilt-shift time-lapse) வசதிகளை ஸ்மார்ட்போனில் வழங்கிய முதல் நிறுவனமாக ரியல்மி இருக்கும். ஸ்டேரி டைம்-லேப்ஸ் வீடியோக்கள் வழக்கமாக பல்வேறு காட்சிகளை தொழில்முறை கேமராக்களில் படமாக்கி பின் அவற்றை கணினி மென்பொருள் மூலம் எடிட் செய்யப்படும். 

ஆனால் புது ஸ்மார்ட்போனில் ரியல்மி பிரத்யேக டைம்-லேப்ஸ் வீடியோ முறையை கொண்டு வீடியோ எடுக்கிறது. இது 4 நிமிடங்களில் 30 புகைப்படங்களை எடுத்து அவற்றை ஸ்டேரி புகைப்படம் அல்லது டைம்-லேப்ஸ் வீடியோவாக மாற்றுகிறது. ஷிப்ட் போட்டோகிராபி அம்சம் டில்ட்-ஷிப்ட் லென்ஸ் மூலம் சாத்தியமாக்கப்படுகிறது. டில்ட்-ஷிப்ட் முறையை கொண்டு டில்ட்-ஷிப்ட் புகைப்படங்கள் மற்றும் 10 மடங்கு வேகமாக டில்ட் ஷிப்ட் டைம்-லேப்ஸ் வீடியோக்களை எடுக்க முடியும்.
ரியல்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மூன்று தலைசிறந்த பில்ட்டர்கள், நியோன் போர்டிரெயிட், டைனமிக் பொக்கே போர்டிரெயிட் மற்றும் ஏஐ கலர் போர்டிரெயிட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்தியாவில் புதிய ரியல்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த மாதத்திலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *