சமூக ஊடகங்கள் ஊடாக பெண்ணின் நற்பெயருக்குக் களங்கம் ஏற் படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச் சின் செயலாளரும் தேசியப் பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
இலங்கையில் புகழ்பெற்ற பெண்களின் நற்பெயருக்கு சமூக ஊடகத் தினூடாக ஏற்படுத்தப்படும் களங்கம் காரணமாக, அழுத்தம் மற்றும் பிரச்சினைகளில் சிக்கியுள்ள பெண்களுக்கு, அரசாங்கம் என்ற வகை யில் நாம் உடனடி தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக் கை களை ஆரம்பித்துள்ளோம் என இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் இலங்கைப் பெண்களின் ஈடுபாடுகள் தொடர்பாக நினைவுகூர்ந்த அவர், வெளிநாட்டு வேலைவாய்ப்பின் ஊடாக அவர்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பு வழங்கி வருவ தாக அவர் தெரிவித்துள்ளார்.
” இந்த பெண்களின் பங்களிப்பு பொருளாதாரத்தை மட்டுமல்லாமல், தே சிய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்து கிறது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் கல்வி நிறுவனத்தில் நேற்று (7) இலங்கையின் பெண் தொழில் நுட்ப வல்லுநர்களின் உன்னத சேவை யைக் கௌரவிக்கும் வகையில் ´ஹீரோ´ குழுமத்தினரால் ஏற்பாடு செய் யப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாதுகாப்புச் செயலாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
தேசிய லொத்தர் சபையின் ஆதரவுடன் ´முகாமைத்துவ பணிகளில் மக ளிர் ´ என்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களைக் கௌரவிக்கும் வகை யில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த பாராட்டு விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட பெண் கல்வியாளர்கள் மற்றும் தொழில் துறையினர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இலங்கையின் பெண் வீராங்கனைகளைப் பாராட்டும் வகையில் ´அபிமன் லியா´ என்ற பாடல் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந்த தனித்துவமான பாடலை இயற்றிய இரு இளைஞர்களுக்கும் பாது காப்பு செயலாளர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
போர் வீரர்களைப் பராமரிக்கும் ´அபிமன்சல´, ஆரோக்கிய விடுதி மற்றும் அங்கவீனமற்ற போர் வீரர்களின் மனைவிகள் மற்றும் தாய்மார்கள் எதிர் நோக்கும் கஷ்டங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டிய ஜெனரல் குண ரத்ன “அத்தகைய பெண்மணிகளின் சகிப்புத்தன்மை மகத்தானது” என்று தெரிவித்துள்ளார்.
“யுத்தத்தின் போது இத்தகைய மன அழுத்தம் மற்றும் துன்பங்களைத் தாம் எதிர் நோக்கியதாகவும் போர் வீரர்களின் அன்புத் தாய்மார்களுக் கும் மனைவிகளுக்கும் ஒட்டுமொத்த தேசத்தினது அன்பும் கௌரவமும் உள்ளதென என நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அவர் மேலும் தெரி வித்துள்ளார்.
அத்துடன் ஆணாதிக்க சமுதாயக் கட்டமைப்பிற்குள் கூட இலங்கைப் பெண் ணுக்கு பாரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.