மாகாண சபை தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்டு ள்ள சட்ட வரைபு அல்லது அதில் உள்ள குழப்பங் களை நீக்கி மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்தல் விடுத் துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்ன ணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை குழு வுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அதிகாரி களுக்கு ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
தொகுதி முறை, எல்லை நிர்ணயம், ஐம்பதுக்கு ஐம்பது சத வீத, பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட கடந்த அர சாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்ட வரைபு அவர்க ளினாலே தோற்கடிக்கப்பட்டதாக அவர் தெரிவித் துள்ளார்.
மாகாண சபைகள் இப்போது மக்கள் பிரதிநிதிகள் இல் லாமல் செயற்பட்டு வருகின்றன.
இந்த நிலைமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தித் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்துகிறார்.