ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடவேண்டாம்

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடவேண்டாம்

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடவேண்டாம் எனவிமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில், பொய்யான மற்றும் வெறுக்கத்தக்கக் கருத்துக்களை வெளி யிடுவதைத் தடுக்கும் வகையில், அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்கும் வகையில், மூன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் கொழும்பு மாவட்ட நீதவான் இன்று இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பிரதிவாதிகளுக் குக் கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்துள்ள மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டத்தரணி ருஸ்ஜி அபீப் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த 9 ஆம் திகதி ஆற்றிய உரையின் மூலம் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தே பாரா ளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இந்த மனுவைத் தாக்கல் செய் திருந்தார்.

அவ்வாறான பொய்யான கருத்துக்களை வெளியிட்டமை மற்றும் தமது பெயருக்குக் களங்கம் விளைவித்தமை தொடர்பில் 10 கோடி ரூபா நஷ்ட ஈட்டைப் பிரதிவாதிகளிடமிருந்து பெற்றுத்தருமாறும் ரிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *