இலங்கையில் நடந்த இனப்படுகொலை, பாலியல் வன்புணர்வு, போன்ற கொடூரமான குற்றங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் தமிழ் ஈழ மக்கள் சுதந்திரமாக வாழ தனி ஈழம் அமைந்திடவும் பாடுபடவுள்ளதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த தேர்தல் அறிக்கையில் இலங்கைத் தமிழர் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் 13 ஆவது அரசியல் சாசன சட்ட திருத்தத்தின்படி ஈழத்தமிழர்களுக்கு வாழ்வுரிமை கிடைத்திட ஐக்கிய நாடுகள் மற்றும் மத்திய அரசு மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலை, பாலியல் வன்புணர்வு, போன்ற கொடூரமான குற்றங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் தமிழ் ஈழ மக்கள் சுதந்திரமாக வாழ தனி ஈழம் அமைந்திடவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது புதிய சர்வதேச நடுநிலை சுதந்திர தீர்ப்பாயம் மூலம் தக்க நடிவடிக்கை எடுக்கும்படி ஐ.நா சபைக்கும் மத்திய அரசுக்கும் தொடந்ந்து அழுத்தம் கொடுப்போம்.
இந்திய வாழ் இலங்கைத்தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை மற்றும் குடியிருப்பு அனுமதி வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
மத்திய அரசு தாமதமின்றி உடனடியாக ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய தக்க ஆணையிட தொடர்ந்து வலியுறுத்துவோம்.