விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு

விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய பிரித்தானியாவின் உள்துறை அலுவலகம் எடுத்த முடிவு “குறைபாடு” என்றும் சட்டவிரோதமானது என்றும் Proscribed Organisations Appeal Commission என்ற தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு மேல்முறையீட்டு ஆணையம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

அந்த முடிவின் அடிப்படையில், பிரிட்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு சிறப்பு மேல்முறையீட்டு ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளது.

இதேவேளை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இன்று (மார்ச் 18) இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விவாதத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

பிரித்தானிய பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களான Siobhain McDonagh , Elliot Colburn மற்றும் Edward Davey ஆகியோர் விவாதத்தை கோரியுள்மை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே பிரிட்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு மேல்முறையீட்டு ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *