சிறுவர்களுக்கான இன்ஸ்டாகிராம் செயலி?

சிறுவர்களுக்கான இன்ஸ்டாகிராம் செயலி?

குழந்தைகள் மட்டும் பயன்படுத்தக்கூடிய புது இன்ஸ்டாகிராம் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. இது 13 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்களுக்காக உருவாக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புது செயலி பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. 

இன்ஸ்டாகிராம் துணை தலைவர் விஷால் ஷா தனது ஊழியர்களுக்கு எழுதிய பதிவின் விவரங்கள் தனியார் செய்து நிறுவனத்திற்கு கிடைத்து இருக்கிறது. அதன்படி இன்ஸ்டாகிராமின் ஹெச்1 பிரியாரிட்டி பட்டியலில் புது செயலி சேர்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சிறுவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான, அதே சமயம் நேர்மையாகவும் பணியாற்றி 13 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய இன்ஸ்டாகிராம் செயலியை உருவாக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறுவர்களுக்கு பாதுகாப்பான தளமாக மாற்றுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. 
புது செயலி யூடியூப் கிட்ஸ் போன்றே செயல்படும். இதில் சிறுவர்களுக்கான தரவுகள் வழக்கத்தைவிட அதிகளவு இடம்பெற்று இருக்கும். புதிய இன்ஸ்டாகிராம் பார் கிட்ஸ் செயலி இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி மற்றும் பேஸ்புக் துணை தலைவர் பவ்னி திவாஞ்சி ஆகியோர் மேற்பார்வையில் உருவாகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *