புர்காவை நிச்சயம் தடை செய்வேன் என உறுதியாக கூறிய அமைச்சர்

புர்காவை நிச்சயம் தடை செய்வேன் என உறுதியாக கூறிய அமைச்சர்

புர்கா மற்றும் மத்ரஸா பாடசாலைகளை தடை செய்வது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவித்துள்ளார்.

புர்கா மற்றும் மத்ரஸா பாடசாலைகளை தடை செய்வது தொடர்பில் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் அது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் புர்காவை தடை செய்தல் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்ரஸா பாடசாலைகளை மூடுவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அது தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எனினும் புர்காவை நிச்சயம் தடை செய்வேன் என உறுதியாக கூறிய அமைச்சர் தற்போது அமைச்சரவையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கின்றமை அவரது தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டதா என்ற சந்டீதகத்தை ஏற்படுத்துகின்றது.

மேற்படி கூற்று சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சு அது தொடர்பில் தெரிவிக்கையில், உடனடியாக அது தொடர்பில் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இன்னும் கூட அது பேச்சுவார்த்தை மட்டத்திலேயே உள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *