இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்

வெஸ்ட் இன்டீஸ் – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இலங்கை அணி முதல் இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இன்டீஸ் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8விக்கெட் இழப்புக்கு 268 ரன் எடுத்து இருந்தது.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இன்டீஸ் 271 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இது இலங்கையின் ஸ்கோரை விட 102 ரன் கூடுதலாகும். 102 ரன் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்து இருந்தது.பெர்னான்டோ 91 ரன்னும், திரிமானே 76 ரன்னும், தனஞ்செய டிசெல்வா 46 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்து இருந்தனர்.இலங்கை அணி தற்போது 153 ரன் முன்னிலையில் உள்ளது. கைவசம் 6 விக்கெட் டுகள் இருக்கிறது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *