மாணவனை தூக்கி வீசிய ஆசிரியை கைது

மாணவனை தூக்கி வீசிய ஆசிரியை கைது

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் ஷா ஆலம் பகுதியில் அமைந்துள்ள பாலர் பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.அக்குறிப்பிட்ட வகுப்பு நடவடிக்கை ஒன்றுக்காக மாணவர்களை வரிசையில் நிற்குமாறு கூறியுள்ளார். சில குழந்தைகள் ஆசிரியை சொன்னபடி வரிசையில் நிற்க, ஒரு சிறுவன் மட்டும் தரையில் அமர்ந்தபடி இருந்துள்ளான்.இதனால் கடும் கோபமடைந்த ஆசிரியை சீக்கிரமாக வரிசையில் நிற்குமாறு கூறியுள்ளார்.அதன்பிறகு திடீரென பொறுமையிழக்கும் அவர் வேகமாக வந்து தரையில் அமர்ந்திருக்கும் அந்த மாணவனை அப்படியே தூக்கி வேகமாக முன் நோக்கி வீசுகிறார். அவர் இரண்டு முறை இவ்வாறு செய்தது தெரிய வந்துள்ளது

இந்தச் சம்பவம் தொடர்பான ஒரு காணொளி நேற்று முன்தினம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. சிறுவன் தூக்கி வீசப்படுவதைக் கண்டு இணையவாசிகள் கடும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தனர். அதிலும் பாலர் பள்ளி ஆசிரியை இவ்வாறு பொறுமையிழந்து செயல்பட்டிருப்பதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.இந்தக் காணொளி வெளியானதை அடுத்து சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், அவர் மீது சிறார் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *